

No:1 ,GeethaNagar,Vayalur road,
Trichy - 620017
Monday to Sunday
10.00 am - 6.00 pm.
Email:vrrmatrimony@gmail.com
Phone: +91 9655337755
About UsWe are a modern matrimonial service that blends cultural values with privacy, trust, and modern matchmaking tools specifically for Tamil families worldwide. வயலூர் ரோடு ரெட்டி திருமணத்தகவல் மையம்திருச்சி புத்தூர் நான்குரோடு முதல் அல்லித்துறை வரை வயலூா் ரோட்டில் உள்ள பல பெயர் கொண்ட நகர்களில் சுமார் 350 ரெட்டி குல குடும்பங்கள் தற்போது வசித்து வருகின்றன . இக்குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் யாவரும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான். அவா்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளவும் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேவையான உதவிகள் செய்யவும் "வயலூர் ரோடு ரெட்டி நலச் சங்கம் "வயலூா் ரோட்டில் உள்ள கீதா நகர் அருகில் 8 .10 .1995 அன்று துவக்கப்பட்டது. சங்கம் சார்பில் ஆண்டுதோறும் குடும்ப விழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற சிறந்த நம் இன மாணவ,மாணவிகட்கு ஊக்கத்தொகையும் ,மேற்படிப்பு தொடர தேவைப்படும் நம் இன மக்களுக்கு உதவி தொகையும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன. பெண்களுக்கு தையல் பயிற்சியும் கணினிப் பயிற்சியும் சிறந்த முறையில் சங்கம் மூலம் வழங்கப்பட்டன. இவற்றை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று வயலூர் ரோடு ரெட்டி திருமண தகவல் மையம் துவங்கப்பட்டது .ஏனெனில் பல கிராமங்களிலிருந்து நம் இன மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து விட்டதால் ஆண் பெண் வரன்களை பற்றிய தகவல் தெரிவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே திருமணத்துக்குத்தகுதியான ஆண் பெண் வரன்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்து நம் இன மக்கள் பார்வைக்குக்கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே மையம் அமைக்கக்காரணம். தகவல் மையம் துவக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை 6685 வரன்கள் பதிவு செய்யப்பட்டு அதில் 5015 திருமணங்கள் நடந்தேறியுள்ளன. மீதி உள்ள 1670 வரன்கட்கும் விரைவில் திருமணமாகும் வாய்ப்புள்ளது .வரன்களின் பெற்றோர்களும் உறவினர்களும் அவ்வப்போது மையத்திற்கு வந்து தங்கள் தேர்வு செய்துள்ள வரன்களின் விபரங்களை எடுத்துச் செல்கின்றனர். சங்க நிர்வாகிகள் வரன் தேடும் பெற்றோர்கட்கு எல்லா உதவிகளையும் அளித்து வருகின்றனர் . தற்போது பெரும்பாலும் திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து வரன்களைப் பதிவு செய்ய நம் இன மக்கள் வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி,கேரளா மாநிலத்தில் இருந்தும் கூட பதிவுகள் உள்ளன . இந்த திருமணத்தகவல் மையம் " ராசியானது " என்று நம் மக்களால் கருதப்படுகிறது தமிழ்நாட்டிலுள்ள நம் குல மக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல ராசியான இணையதள பதிவு மையம் தேவை என பெற்றோா்களும்,உறவினர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இதை நிறைவேற்றும் பொருட்டு திருச்சி வயலூர் ரோடு ரெட்டி மேட்ரிமோனி துவங்கப்பட்டுள்ளது
இதன் இணையதள முகவரி :
www.trichyvayalurroadreddymatrimony.in
இதனுடைய கைப்பேசி எண் / தொலைபேசி எண்
96 553 377 55 மற்றும் 0431 2781555
மேற்கண்ட இணையதளத்தில் தங்கள் வரன்களைப்பதிவு செய்து பயன் பெறுமாறு வேண்டுகிறோம்.
இம்மையத்தின் மூலம் இரு மனங்கள் ஒருமனமாகி நல்வாழ்வு வாழ நல்வாழ்த்துக்கள்.
வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
[விடுமுறை இன்றி]
|